இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் - கேப்டன் டு பிளெஸ்சிஸ் பேட்டி

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: X (Twitter)
Image Courtesy: X (Twitter)
Published on

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 52 ரன்கள் எடுத்தார்.

டெல்லி தரப்பில் கலீல் அகமது, ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 140 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 47 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் 32 ரன்னும், பவுலிங்கில் 4 ஓவரில் 19 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய கேமரூன் க்ரீனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்த வெற்றியால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் மிகவும் புத்திசாலித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எங்களுக்கு ஆரம்பத்தில் விஷயங்கள் ஒன்று சேரவில்லை. தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டையும் ஒன்று சேர்க்க முடிகிறது.

சில நேரங்களில் மக்கள் போட்டியை பற்றி நிறைய விஷயங்கள் பேசுகிறார்கள். இதை தாண்டி எங்களுக்கு ஒரு இடது கை சுழற்பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார். ஸ்வப்னில் சிங் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்திருக்கிறார். எங்களுக்கு திரைக்கு பின்னால் வெளியில் நிறைய வேலைகள் நடந்திருக்கின்றன. நாங்கள் இப்பொழுது எல்லாவற்றையும் சரியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு பந்து வீச்சில் நிறைய ஆப்சன்கள் வந்திருக்கிறது.கடந்த சில போட்டிகளில் தயாள் மற்றும் லாக்கி பெர்குசன் இருவரும் விதிவிலக்காக இருந்தார்கள். நாங்கள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு பாணியில் விளையாட விரும்புகிறோம். தைரியமாக இருக்க வேண்டும், சிலவற்றை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com