சென்னை அணிக்கு எதிரான வெற்றி: பந்துவீச்சாளர்களுக்கு ராஜஸ்தான் கேப்டன் பாராட்டு

ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற் றது.
சென்னை அணிக்கு எதிரான வெற்றி: பந்துவீச்சாளர்களுக்கு ராஜஸ்தான் கேப்டன் பாராட்டு
Published on

கவுகாத்தி,

ஐபிஎல் 2026 தொடரின் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.முதலில் பேட் செய்த சென்னை அணி 19.4 ஒவர்களில் 127 ரன்னில் சுருண்டது. இந்த இலக்கை ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களி லேயே எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வெற்றி தொடர்பாக ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறுகையில்,

'சென்னை அணி வருவதற்கு முன்பே இங்கு ஓரிரு நாட்கள் பயிற்சி செய்தோம். செம்மண் ஆடு களம் மற்றும் முந்தைய நாள் பெய்த மழை காரணமாக இருந்த ஈரப்ப தம் பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுத்தது. பவுலர்கள் திட்டங்களை கச் சிதமாக செயல்படுத்தினர். இந்த ஆட்டத்தில் 'டாஸ்' முக்கிய பங்கு வகித் தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். மீண்டும் இங்கு நடக்கும் ஆட்டத்தின் போது இத்தகைய சீதோஷ்ண நிலை நிலவினால், இதே போன்று விளை யாடுவோம் என்று நம்புகிறேன்.இந்த சீசனில் 14 ஆட்டங்களிலும் நீங்கள் ஆடுவீர்கள், ஊடகம், ஆட்டத் தின் போக்கு என எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். களம் இறங்கி விரும்பிய மாதிரி ஆடுங்கள் என்று சூர்யவன்ஷியிடம் கூறினேன். நானும், துருவ் ஜூரெலும் 4-வது ஓவர் வரை வெளியில் இருந்து அவரது பேட்டிங்கை பார்த்து வியந்தோம். என்ன நடக்கிறது, அவரால் எப்படி இந்த மாதிரி ஆட முடிகிறது என பேசினோம். அவர் எங்கள் அணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com