இலங்கைக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்றம் கண்ட தென் ஆப்பிரிக்கா


இலங்கைக்கு எதிரான வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்றம் கண்ட தென் ஆப்பிரிக்கா
x

Image Courtesy: @ICC

இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

துபாய்,

இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும், இதில் கடந்த 27ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா (61.11 சதவீதம்) முதல் இடத்தில் தொடர்கிறது. இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா (59.26 சதவீதம்) 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியா (57.69 சதவீதம்) 3வது இடத்திற்கு வந்துள்ளது.

நியூசிலாந்து (54.55 சதவீதம்) 4வது இடத்திலும், இலங்கை (50.00 சதவீதம்) 5வது இடத்திலும், இங்கிலாந்து (40.79 சதவீதம்) 6வது இடத்திலும், பாகிஸ்தான் (33.33 சதவீதம்) 7வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (26.67 சதவீதம்) 8வது இடத்திலும், வங்காளதேசம் (25.00 சதவீதம்) 9வது இடத்திலும் உள்ளன.

1 More update

Next Story