பவுண்டரியை தடுக்க பாய்ந்தபோது காயம்...வலியால் துடித்த சிராஜ்… - வீடியோ வைரல்

இந்த சம்பவம் வீரர்களும் ரசிகர்களும் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பவுண்டரியை தடுக்க பாய்ந்தபோது காயம்...வலியால் துடித்த சிராஜ்… - வீடியோ வைரல்
Published on

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜ்ஸ்தான் - குஜராத் அணிகள் மோதிய ஆட்டத்தில் நடந்த சம்பவம் ரசிகர்களை பதற வைத்தது. குஜராத் அணியின் அஷோக் ஷர்மா வீசிய பந்தை இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பலமாக அடித்தார். அந்த பந்து பவுண்டரிக்குச் செல்லும் நிலையில் இருந்தது. அதை சிராஜ் பாய்ந்து தடுக்க முயற்சி செய்தார்.

ஆனால், பந்து பவுண்டரிக்கு சென்றது. இதில் சிராஜுக்கு காயம் ஏற்பட கடும் வலியால் தரையில் படுத்தபடி வலியால் துடித்தார். இந்த சம்பவம் வீரர்களும் ரசிகர்களும் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

Also Read
'ஓராண்டுக்கு பிறகு விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி' - நடராஜன்
பவுண்டரியை தடுக்க பாய்ந்தபோது காயம்...வலியால் துடித்த சிராஜ்… - வீடியோ வைரல்

அணியின் முக்கிய பந்துவீச்சாளர் காயமடைந்ததால், குஜராத் அணிக்கு இது பெரிய பின்னடைவு என கருதப்பட்டது. சில நேரம் கழித்து மருத்துவர்கள் காயம் மிகப்பெரியது அல்ல, லேசான வலி மட்டுமே என தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து சிராஜ் மீண்டும் மைதானத்திற்குள் வந்து தனது ஓவர்களை பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com