விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; தமிழக வீரர் ஜெகதீசன் சதம் விளாசல்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி 8 விக்கெட்டுக்கு 354 ரன்கள் சேர்த்து உள்ளது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; தமிழக வீரர் ஜெகதீசன் சதம் விளாசல்
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடந்த போட்டி ஒன்றில், தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் விளையாடின.

இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பாபா 13 ரன்களில் வெளியேறினார். மற்றொரு வீரரான ஜெகதீசன் சதம் விளாசினார். அவர் 102 ரன்கள் (101 பந்துகள், 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

அணியில் ரவிஸ்ரீனிவாசன் (61), தினேஷ் கார்த்திக் (44), இந்திரஜித் (31), விஜய் சங்கர் (3), வாஷிங்டன் சுந்தர் (0), சித்தார்த் (0) ரன்களில் வெளியேறினர். மற்றொரு தமிழக வீரரான ஷாருக் கான் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரகுபதி 1 ரன்னுடன் ஆட்டமிழக்கவில்லை. 50 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு தமிழக அணி 354 ரன்கள் சேர்த்து உள்ளது. இதனால் கர்நாடக அணிக்கு 355 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com