விஜய் ஹசாரே இறுதிப்போட்டி: சவுராஷ்டிரா அணிக்கு 318 ரன்கள் இலக்கு நிர்ணயித்த விதர்பா

அதர்வா தைடே சதமடித்து அசத்தினார்
விஜய் ஹசாரே இறுதிப்போட்டி: சவுராஷ்டிரா அணிக்கு 318 ரன்கள் இலக்கு நிர்ணயித்த விதர்பா
Published on

மும்பை,

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஹார்விக் தேசாய் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக அதர்வா தைடே , அமன் மோகடே இருவரும் களமிறங்கினர். அமன் மோகடே 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் யாஷ் ரதோத், அதர்வா தைடே இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். யாஷ் ரதோத் 54 ரன்களில் வெளியேறினார். அதர்வா தைடே நிலைத்து ஆடினார். அவர் சதமடித்து அசத்தினார். அதர்வா தைடே 128 ரன்கள் எடுத்தார். இறுதியில் விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 318 ரன்கள் இலக்குடன் சவுராஷ்டிரா அணி விளையாடுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com