விஜய் ஹசாரே டிராபி: தமிழ்நாட்டுக்கு எதிராக டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு..!

நாளை நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
Published on

ராஜ்கோட்,

விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - அரியானா அணிகள் மோத உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com