விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி
Published on

கட்டாக்,

விஜய் ஹசாரே கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 28 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

லீக் சுற்றில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி கட்டாக்கில் நேற்று நடந்த ஆட்டத்தில் திரிபுராவை எதிர்கொண்டது. முதலில் ஆடிய தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 81 ரன்னும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 77 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய திரிபுரா அணி, தமிழக வீரர்களின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.2 ஓவர்களில் 75 ரன்னில் சுருண்டது. இதனால் தமிழக அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லியில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் விதர்பாஅசாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அசாம் அணி 41.4 ஓவர்களில் 169 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் விதர்பா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் திரிபுராவை தோற்கடித்து 5வது வெற்றியை ருசித்தது.

கொல்கத்தாவில் நடந்த டி பிரிவு ஆட்டம் ஒன்றில் கர்நாடகா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஷ்கார் அணியை சாய்த்து தொடர்ச்சியாக 6வது வெற்றியை தனதாக்கியது. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்முகாஷ்மீர் அணியை வீழ்த்தியது. ஜார்கண்ட் அணியின் கேப்டன் டோனி 17 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

லீக் ஆட்டங்கள் முடிவில் விதர்பா, பரோடா (ஏ பிரிவு), தமிழ்நாடு, மராட்டியம் (பி பிரிவு), பெங்கால், குஜராத் (சி பிரிவு), கர்நாடகா, ஜார்கண்ட் (டி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றன. வருகிற 13ந் தேதி நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் கர்நாடகாபரோடா, தமிழ்நாடுகுஜராத் அணிகளும், 14ந் தேதி நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் விதர்பாஜார்கண்ட், பெங்கால்மராட்டியம் அணிகளும் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com