விஜய் ஹசாரே டிராபி; சத்தீஷ்காருக்கு எதிரான ஆட்டம்... தமிழகம் 301 ரன்கள் குவிப்பு

தமிழகம் தரப்பில் இந்திரஜித் 75 ரன், விஜய் சங்கர் 71 ரன் எடுத்தனர்.
Image Courtesy: @TNCACricket
Image Courtesy: @TNCACricket
Published on

விஜயநகரம்,

விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டம் ஒன்றில் தமிழகம் - சத்தீஷ்கார் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சத்தீஷ்கார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தமிழகம் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக துஷார் ரஹேஜா மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜெகதீசன் 21 ரன்னிலும், துஷார் ரஹேஜா 28 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய பூபதி குமார் 37 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 31 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் விஜய் சங்கர் 71 ரன்னிலும், இந்திரஜித் 75 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய முகமது அலி 9 ரன், வருண் சக்கரவர்த்தி 3 ரன், சந்தீப் வாரியர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் தமிழகம் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 301 ரன்கள் குவித்தது. சத்தீஷ்கார் தரப்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஷ்கார் அணி ஆடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com