விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பஞ்சாப் அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
பெங்களூரு,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - மத்திய பிரதேச அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் பிரப்சிம்ரன் சிங் 88 ரன்களும், அன்மோல்பிரீத் சிங் 70 ரன்களும் , நேஹால் வதேரா 56 ரன்களும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேச அணி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மத்திய பிரதேச அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் பஞ்சாப் அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story






