விஜய் ஹசாரே கோப்பை : சவுராஷ்டிரா அணிக்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்

அன்மோல்பிரீத் சிங் சதமடித்து அசத்தினார்
விஜய் ஹசாரே கோப்பை : சவுராஷ்டிரா அணிக்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
Published on

பெங்களூரு,

33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் இன்று நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஹார்விக் தேசாய் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். அந்த அணியில் அன்மோல்பிரீத் சிங், பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர் . அன்மோல்பிரீத் சிங் சதமடித்து அசத்தினார். பிரப்சிம்ரன் சிங் 87 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 291 ரன்கள் எடுத்தது. சவுராஷ்டிரா அணியில் சேத்தன் சகரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 292 ரன்கள் இலக்குடன் சவுராஷ்டிரா அணி விளையாடுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com