விஜய் ஹசாரே கோப்பை : கர்நாடகாவை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, விதர்பா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பெங்களூரு,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா - விதர்பா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 49.4 ஓவர்கள் முடிவில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 76 ரன்கள், ஸ்ரீஜித் 56 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து 281 ரன்கள் இலக்குடன் விளையாடிய விதர்பா அணியில் அமன் மோகடே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.அவர் 138 ரன்கள் எடுத்தார் . சமர்த் 66 ரன்கள் எடுத்தார்.
இதனால் 46.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து விதர்பா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Related Tags :
Next Story






