மைதானத்தில் தோனி, ரோகித்… கோலி வராதது ஏன்? - வெளியான காரணம்

இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மைதானத்தில் தோனி, ரோகித்… கோலி வராதது ஏன்? - வெளியான காரணம்
Published on

சென்னை,

ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் தோனி, ரோகித் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரவில்லை. இது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.

இதற்கு ஐசிசி விதிமுறைகள் காரணம் என்று கூறப்படுகி்றது. டி20 உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்களுக்கு மரியாதை நிமித்தமாக இறுதிப்போட்டிக்கு அழைப்பு விடுக்கப்படும். 2007-ம் ஆண்டு இந்தியாவை சாம்பியனாக்கிய தோனி மற்றும் 2024-ம் ஆண்டு கோப்பை வென்ற ரோகித் சர்மா ஆகியோர் அதன்படி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Also Read
விவியன் ரிச்சர்ட்ஸ்போல அதிரடி… ஜெயவர்தனேபோல ஸ்டைல் - சாம்சனை புகழ்ந்த கவாஸ்கர்
மைதானத்தில் தோனி, ரோகித்… கோலி வராதது ஏன்? - வெளியான காரணம்

ஆனால் விராட் கோலியின் தலைமையில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லாததால், அவருக்கு அந்த நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் அவர் மைதானத்திற்கு வரவில்லை என தெரிகிறது.

இதற்கிடையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாக முன்பே தெரிவித்திருந்தார். அதனால் இந்தியாவின் இந்த வெற்றியை அவர் வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் ரசித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com