அனில் கும்ப்ளேவை நியமிக்கும்போதே கோலி எதிர்த்தார்: அஜய் ஷிர்கே சொல்கிறார்

அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமிக்கும்போதே, விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார் என்று பிசிசிஐ-யின் முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே கூறியுள்ளார்.
அனில் கும்ப்ளேவை நியமிக்கும்போதே கோலி எதிர்த்தார்: அஜய் ஷிர்கே சொல்கிறார்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. அனில் கும்ப்ளே மைதானத்திற்குள்ளும், வீரர்களின் அறைக்குள்ளும் ஹெட்மாஸ்டர் போன்று செயல்படுகிறார் என வீரர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனில் கும்ப்ளேவை நியமனம் செய்யும்போதே விராட் கோலி கேள்வி எழுப்பியதாக என்று பிசிசிஐ-யின் முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே கூறியுள்ளார்.

இதுகுறித்து ஷிர்கே ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அனில் கும்ப்ளே நியமனம் நடந்த சமயத்தில் இதுபற்றி (கும்ப்ளே - கோலி இடையே பிளவு) சில முணுமுணுப்புக்கள் இருந்தன.

அந்த சமயத்தில் பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாகூர் முயற்சி எடுத்து, இரு தரப்பிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது, அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முடிவு செய்தது கிரிக்கெட் நிர்வாகக்குழு. அதை நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். அதனால்தான், கும்ப்ளேவிற்கு எதிராக ஒரு வருடத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டு, அவரது செயல்பாட்டை பார்த்து அதன்பின் நீட்டித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

கும்ப்ளே குறித்த பார்வை கோலியின் தனிப்பட்டது என்பதை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். நான் சொன்னதைபோல், அனுராக் தாகூர் முயற்சி எடுத்து, கிரிக்கெட் குழுவால் ஒருமனதாக எடுத்த முடிவு இது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோலியிடம் கூறினார்.

நான் பிசிசிஐ-யின் செயலாளராக இருந்ததால், கும்ப்ளே இந்திய அணியைப் பற்றியும் இந்திய அணியின் வெற்றி குறித்தும் என்னிடம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அந்த பதவியில் பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.

அப்போது அவரிடம், பயிற்சியாளர் பதவிக்கு யாருடைய சிபாரிசும் ஏற்கப்படமாட்டாது. அதற்குண்டான வழிமுறை பின்னப்பற்றப்படும். அதை நீங்கள் கட்டாயம் பின்பற்றுங்கள் என்று தெளிவாக கூறினேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com