பச்சை நிற ஜெர்சியும் கோலியும் - ஒரு பார்வை

இதுவரை பச்சை நிற ஜெர்சியில் 16 இன்னிங்ஸ்களில் விராட் கோலி விளையாடியுள்ளார்.
பச்சை நிற ஜெர்சியும் கோலியும் - ஒரு பார்வை
Published on

பெங்களூரு,

ஐபிஎல் தொடரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் ஆர்சிபி அணி ஆண்டுதோறும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகிறது. இந்தச் சிறப்பு ஜெர்சியிலும் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு முதல், ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடி வருகிறது. இருப்பினும், இந்த ஜெர்சியில் அணியின் ஒட்டுமொத்த வெற்றி சாதனை (Win Record) மிகவும் சுமாராகவே உள்ளது. 2026 ஐபிஎல் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி வரை, இந்த ஜெர்சியில் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் ஆர்சிபி தோல்வியையே சந்தித்துள்ளது.

Also Read
“காயத்துடன் விளையாட வைத்தது தவறு’’… சிஎஸ்கே அணியை சாடிய அஸ்வின்
பச்சை நிற ஜெர்சியும் கோலியும் - ஒரு பார்வை

ஆர்சிபி அணிக்கு பச்சை ஜெர்சி சற்று சுமாராகவே இருந்தாலும் கோலிக்கு அது அற்புதமாகவே அமைந்திருக்கிறது. இதுவரை பச்சை நிற ஜெர்சியில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி, 1 சதம் உள்பட 527 ரன்களைக் குவித்துள்ளார். 2016-ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஏபி டி வில்லியர்ஸுடன் இணைந்து கோலி ஆடிய ஆட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. வெறும் 55 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து (198 ஸ்ட்ரைக் ரேட்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் ஆர்சிபி 144 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

2016 இல் சிறப்பான சதம் அடித்தாலும், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பச்சை ஜெர்சி போட்டிகளில் டக் அவுட் (0 ரன்) ஆன மோசமான சாதனையும் அவருக்கு உள்ளது. இருப்பினும் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து மீண்டும் பார்முக்குத் திரும்பினார். நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 'பச்சை ஜெர்சி' போட்டியில், கோலி அதிரடியாகத் தொடங்கினாலும் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி என்கிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த சீசனில் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 158 ஸ்ட்ரைக் ரேட்டில் 247 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அணியின் ரன் வேகத்தை உயர்த்தும் முயற்சியில், அவ்வப்போது 20 அல்லது 30 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தாலும், கோலியின் தற்போதைய அதிரடி ஆட்டம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com