தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை - பிசிசிஐ தலைவர் கங்குலி

தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை - பிசிசிஐ தலைவர் கங்குலி
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 39-வது தலைவராக பொறுப்பேற்ற பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுரவ் கங்குலி கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி மிக முக்கிய நபர். எனவே, அவருடன் பேசுவேன், அவருக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவாக இருப்பேன். டோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் அவருடன் பேசவில்லை.

டோனியின் சாதனைகள் இந்தியாவை பெருமை அடையச்செய்துள்ளன. அவரது சாதனைகளை நினைத்து நீங்கள் வியப்படைவீர்கள். சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்றுவிட மாட்டார்கள். கிரிக்கெட் வாரியம் மீதான நம்பகத்தன்மையில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன். ஊழலற்ற, அனைவருக்கும் ஒரே மாதிரியான நிர்வாகமாக பிசிசிஐ இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com