பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பர தூதராக வீராட் கோலி தொடர்வார்- வங்கி அறிவிப்பு

பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதராக விராட்கோலி தொடர்வார் என்றும் வங்கியின் பிரச்சனைகளுக்கும் விராட் கோலியின் தூதரக செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ViratKohli #PNBFraud
பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பர தூதராக வீராட் கோலி தொடர்வார்- வங்கி அறிவிப்பு
Published on

புதுடெல்லி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளை இங்குள்ள விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பாக வங்கியின் ஊழியர்கள் 18 ஆயிரம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மீண்டும் பங்குகளை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பரத்தூதராக இருந்து வருகிறார். வங்கிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக விராட் கோலி தூதரக பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், இதனால் பிஎன்பி வங்கிக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகிகள், பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதராக விராட்கோலி தொடர்வார் என்றும் வங்கியின் பிரச்சனைகளுக்கும் விராட் கோலியின் தூதரக செயல்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு திரும்பப் பெறும் வரம்புகளை விதிக்கவில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது மற்றும் சாதாரண வங்கி நடவடிக்கைகள் தொடர்கின்றன.என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com