ராணுவ வாகனத்தில் இளைஞரை கட்டிச்சென்ற அதிகாரியின் நடவடிக்கைக்கு சேவாக் பாராட்டு

ராணுவ வாகனத்தில் இளைஞரை கட்டிச்சென்ற அதிகாரியின் நடவடிக்கைக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராணுவ வாகனத்தில் இளைஞரை கட்டிச்சென்ற அதிகாரியின் நடவடிக்கைக்கு சேவாக் பாராட்டு
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ராணுவத்தினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கலவரக்காரர்களின் கல்வீச்சிலிருந்து தப்பிப்பதற்காக காஷ்மீர் இளைஞர்களை மனிதக் கேடயமாக ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த கூற்றை மெய்பிக்கும் வகையில் அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் இளைஞர் ஒருவரை கட்டிவைத்து அழைத்துச் செல்வது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் செயலில் மேஜர் லீதுல் கோகோய் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேஜர் லீதுல் கோகோய்க்கு ராணுவத்தில் சிறப்பான வகையில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ராணுவ மேஜர் லீதுல் கோகாய் செயலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்து உள்ளார். தனது டுவிட்டரில் இந்த கருத்தை பதிவு செய்துள்ள சேவாக் அதில் கூறியிருப்பதாவது:- மெச்சத்தக்க வகையில் பணி புரிந்ததற்காக விருது பெற்றுள்ள மேஜர் நிதின் கோகாய்க்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது வீரர்களையும் அங்கு பணி புரிந்தவர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர சிறந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com