போர்ப்பதற்றம்: ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம் - அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
போர்ப்பதற்றம்: ஐ.பி.எல். தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தம் - அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதனிடையே தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். தொடரின் நடப்பு சீசனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com