இந்திய ரசிகர்கள் குறித்த பாக்.செய்தியாளரின் கருத்துக்கு வார்னர் பதிலடி


இந்திய ரசிகர்கள் குறித்த பாக்.செய்தியாளரின் கருத்துக்கு வார்னர் பதிலடி
x

image courtesy:PTI

டேவிட் வார்னர் தற்போது பி.எஸ்.எல். தொடரில் விளையாடி வருகிறார்.

கராச்சி,

ஐ.பி.எல். போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தில் கலந்து கொண்ட இவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதன் காரணமாக தற்போது இவர் பி.எஸ்.எல். தொடரில் விளையாட உள்ளார்.

இந்நிலையில் இந்த தொடருக்காக பாகிஸ்தான் சென்றுள்ள வார்னரிடம் முதல் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர், இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் தேர்வு செய்யப்படாததால், பல 'இந்திய ரசிகர்கள்' உங்களை பி.எஸ்.எல். தொடரில் விளையாடுவதற்காக ட்ரோல் செய்ததாக கூறினார்.

இருப்பினும் இந்த கூற்றை மறுத்த வார்னர், இதனை கேள்விப்படுவது இதுவே முதல் முறை என்று பதிலடி கொடுத்தார்.

இது குறித்து வார்னர் கூறுகையில், "நீங்கள் கூறுவதை நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை. என் பார்வையில் நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். கடந்த காலங்களில் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை என்னை பி.எஸ்.எல்.-க்கு வர அனுமதிக்கவில்லை. இப்போது, நான் விளையாட விரும்புகிறேன். கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்க விரும்புகிறேன். நாங்கள் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்" என கூறினார்.

1 More update

Next Story