அடிலெய்ட் பகல்-இரவு டெஸ்டில் வார்னர் காயத்துடன் களம் இறங்குவார் - ஆஸ்திரேலிய கேப்டன் தகவல்

அடிலெய்டில் இன்று நடைபெறும் 2-வது டெஸ்டில் வார்னர் விளையாடுவார் என்பதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உறுதி செய்துள்ளார்.
அடிலெய்ட் பகல்-இரவு டெஸ்டில் வார்னர் காயத்துடன் களம் இறங்குவார் - ஆஸ்திரேலிய கேப்டன் தகவல்
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்குகிறது. ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் 94 ரன்கள் குவித்தார்.

ஆனால் பேட்டிங் செய்த போது, இங்கிலாந்து பவுலர்கள் வீசிய பந்து விலாப்பகுதியில் இரண்டு முறை பலமாக தாக்கியது. வலியால் அவதிப்பட்ட அவர் 3-வது நாள் பீல்டிங்குக்கு வரவில்லை. 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் செய்யவில்லை. இதனால் பிங்க் பந்து டெஸ்டில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் கிளம்பியது.

இந்த நிலையில் 2-வது டெஸ்டில் வார்னர் விளையாடுவார் என்பதை ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உறுதி செய்துள்ளார். நேற்று முன்தினம் பேட்டிங் பயிற்சியின் போது வார்னர் கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்தார். ஆனாலும் அவர் இந்த டெஸ்டுக்கு நிச்சயம் சரியாக இருப்பார். இந்த காயம் எலும்பு முறிவோ அல்லது மோசமடையும் அளவுக்கு உள்ள காயமோ அல்ல. கொஞ்சம் வலி உள்ளது அவ்வளவு தான். இது அவரது பேட்டிங் அணுகுமுறையில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை என்றும் கம்மின்ஸ் குறிப்பிட்டார்.

இதே போல் முதலாவது டெஸ்டில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஜய் ரிச்சர்ட்சன் ஆடுவார் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com