காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.
காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்
Published on

புதுடெல்லி,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி (பிற்பகல் 12.45 மணி) ஹராரேயில் நடக்கிறது. நேற்று முன்தினம் ஹராரே சென்றடைந்த இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் .ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்த தொடரில் அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் காயம் காரணமாக விலகி உள்ளார். மான்செஸ்டரில் நடந்த ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை போட்டியில் களமிறங்கும் போது வாஷிங்டன் சுந்தர் இடது தோளில் பலமாக காயம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com