ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றி பெற இவர்கள் பிட்டாக இருக்க வேண்டும் - வாசிம் ஜாபர்

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடியது. அந்த இரண்டு தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. மேலும் இந்தியா கடந்த 4 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. கடந்த இரு முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது போல், இந்த முறையும் இந்திய அணி வீழ்த்துமா என்பது குறித்து வாசிம் ஜாபர் தனது கருத்தை கூறியுள்ளார். இது பற்றி எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு,

ஒருவேளை பும்ரா, ஷமி, சிராஜ் பிட்டாக இருந்து பெரும்பாலான போட்டிகளில் விளையாடினால் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றி பெற இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் இடது கை வேகப்பந்து வீச்சாளராக புதிய ஆப்ஷனை கொண்டு வருவார்.

அதே போல மயங்க் யாதவ் காயத்திலிருந்து குணமடைந்து பிட்டாகி விளையாடத் தயாராக இருந்தால் கருப்பு குதிரையாக (துருப்பு சீட்டு வீரராக) செயல்படக்கூடியவர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com