தென் ஆப்பிரிக்க வீரருக்கு மன்கட் ரன் அவுட் எச்சரிக்கை விடுத்த தீபக் சாஹர்- வைரல் வீடியோ

ரன் அவுட் செய்வதற்கு முன் எச்சரிக்கை கொடுத்த தீபக்கின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.
Image Courtesy: Twitter 
Image Courtesy: Twitter 
Published on

இந்தூர்,

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரைலி ரூசோவின் அதிரடி சதத்தால் 227 ரன்கள் குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்டப்ஸ்-க்கு 16-வது ஓவரில் மன்கட் ரன் அவுட் எச்சரிக்கை விடுத்தார் தீபக் சாஹர். 16-வது ஓவரின் முதல் பந்தை வீச ஓடிவந்த தீபக் சாஹர், பவுலிங் முனையில் நின்ற ஸ்டப்ஸ் க்ரீஸை விட்டு நகர்ந்ததை கண்டு பந்துவீசாமல் நின்று மன்கட் எச்சரிக்கை விடுத்தார். அப்போது இருவரும் புன்னகையை பரிமாறி கொண்டனர்.

தீபக் சாஹர் மன்கட் எச்சரிக்கை கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மன்கட் ரன் அவுட் செய்வதற்கு முன் வீரருக்கு ஒருமுறை எச்சரிக்கை கொடுத்த தீபக்கின் செயலை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

கடந்த மாதம் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா செய்த ரன்-அவுட்டை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் மன்கட் ரன்-அவுட் விவகாரம் பெரும் பேசுபொருளாகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com