மிரட்டலான கேட்ச் பிடித்து ரசிகர்களை மீண்டும் வியப்பில் ஆழ்த்திய ரெய்னா- வைரலாகும் வீடியோ

சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Screengrab from video Tweeted By @Colors_Cineplex
Screengrab from video Tweeted By @Colors_Cineplex
Published on

சென்னை,

சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

இந்த தொடருக்கான அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி நேற்று ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. ராய்பூரில் நடந்த இந்த போட்டியில் முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான சுரேஷ் ரெய்னா அற்புதமாக பிடித்த ஒரு கேட்ச் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய லெஜண்ட்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் விளையாட அழைத்தது. அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பென் டன்க் 25 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். அபிமன்யு மிதுன் வீசிய 16 ஓவரில் பென் டன்க் ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க முயன்றார்.

அப்போது பாய்ண்டில் நின்றிருந்த சுரேஷ் ரெய்னா அதை அற்புதமாக பிடித்தார். அந்த கேட்ச்-யின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டின் மிக சிறந்த பீல்டர்களுள் ஒருவர் சுரேஷ் ரெய்னா. ரன் அவுட் மற்றும் கேட்ச்களில் பலமுறை அற்புதங்களை நிகழ்த்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த ரெய்னா தற்போது மீண்டும் அற்புதமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்கவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com