வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாற்று வீரர்களின் பட்டியலில் வெய்ன் பிராவோ, பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாற்று வீரர்களின் பட்டியலில் வெய்ன் பிராவோ, பொல்லார்ட் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாற்று வீரர்களின் பட்டியலில் வெய்ன் பிராவோ, பொல்லார்ட்
Published on

செயின்ட் ஜான்ஸ்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணியில் கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஷாய் ஹோப் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் வீரர்கள் யாராவது உடல்நலக்குறைவு அல்லது காயமடைந்து விலக நேரிட்டால் அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை சேர்ப்பதற்காக மாற்று வீரர்களின் பட்டியலுக்கு 10 வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இதில் ஆல்-ரவுண்டர்கள் கீரன் பொல்லார்ட், வெய்ன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், கீமோ பால் ஆகியோரும் அடங்குவர். ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் 35 வயதான வெய்ன் பிராவோ கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com