

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 228 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சிவர் (51) அரை சதம் கடந்துள்ளார்.
இந்திய அணியின் ஜூலான் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளும் மற்றும் ஆர்.எஸ். கெய்க்வாட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடியது. இந்திய அணியின் பூனம் ராவத் (86) மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் (51) அரை சதம் கடந்தனர்.
இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 219 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.