கேஷவ் மகராஜ் இந்த தொடரில் மொத்தம் 127 ஓவர்கள் பந்து வீசி 514 ரன்களை வாரி வழங்கி 6 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். பந்து வீச்சில் சோபிக்காத அவர் ஆச்சரியமளிக்கும் வகையில் பேட்டிங்கில் அரைசதம் உள்பட 103 ரன்கள் சேர்த்து கணிசமான பங்களிப்பை அளித்துள்ளார்.