நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்: நியூசிலாந்து கேப்டன்

இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்: நியூசிலாந்து கேப்டன்
Published on: 

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந் தது.

இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட்டும் (24 ரன்), பின் ஆலெனும் (45 ரன்) சிறப் பான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டேரில் மிட்செல் 28 ரன் எடுத்தார்.4-வது விக்கெட்டுக்கு கிளென் பிலிப்சும், பெவன் ஜேக்கப்சும் கைகோர்த்து இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த னர். மயங்க் யாதவ், அக்ஷர் பட்டேலின் ஒவர்களில் சிக்சர், பவுண்டரிகள் ஓடின. இதனால் நியூசிலாந்து 200-ஐ எளி தில் தாண்டியது. ஜேக்கப்ஸ் 31 ரன்களில் (16 பந்து, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக தங்களது முந் தைய அதிகபட்ச ஸ்கோரையும் நியூசிலாந்து சமன் செய்தது. 13-வது அரைசதத்தை எட்டிய பிலிப்ஸ் 82 ரன்களுடன் (40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் 226 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், அபி ஷேக் ஷர்மாவும் களம் புகுந்தனர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை பொளந்து கட்டினர். பெர்குசன் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர், ஆடம் மில்னே பந்துவீச்சில் 2 பவுண்டரி, 2 சிக்சர் என ரன்மழை பொழிந்து ரசிகர்களை துள் ளல் போட வைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் (5.5 ஓவர்) திரட்டி வலுவான அடித்தளமிட்டனர். அபிஷேக் ஷர்மா 29 ரன்களில் (12 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் தனது 11-வது அரைசதத்தை நிறைவு செய்த சாம்சன் 67 ரன்களில் (33 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) சான்ட்னெரின் சுழற்பந்தில் போல்டானார்.

அடுத்து வந்த திலக் வர்மா (6 ரன்), இஷான் கிஷன் (1 ரன்) சுழல் வலையில் சிக்கினர். 29 ரன் இடைவெளியில் 4 விக்கெட் சரிந்ததால் இந்தியா சற்று தடுமாற்றத்திற்குள்ளானது.இந்த நெருக்கடியான சூழலில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும். அக்ஷர் பட்டேலும் இணைந்து அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். அக்ஷர் பட்டேல் தனது பங்குக்கு 24 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன். ஆல்-ரவுண்டர் நமன் திர் கூட்டணி சேர்ந்தார். ஆட்டத்தை முன்னெடுத்து சென்ற இவர்கள் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுப்பதிலும், ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டுவதிலும் கச்சிதமாக செயல்பட்டனர். இந்தியாவுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. ஸ்ரேயாஸ் அய் யருக்கு 27 ரன்னில் பின் ஆலென் சுலப கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார். 17-வது ஓவரில் சான்ட்னெரின் பந்து வீச்சில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் எடுத்தது ஆட்டத்தை இந்தியா பக்கம் முழுமையாக திருப்பியது.

ஸ்கோர் 210-ஆக உயர்ந்த போது ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் (28 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து நிதிஷ்குமார் ரெட்டி வந்தார்.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி பதற்றத்தை தணித்த நமன் திர் 2-வது பந்தில் ஒரு ரன் னுக்கு ஓடினார். 3-வது பந்தில் நிதிஷ்குமார் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை நமன் திர் சிக்சருக்கு தெறிக்கவிட்டு இலக்கை எட்ட வைத்தார்.

இந்திய அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. 20 ஓவர் போட்டியில் இந்தியா விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

நமன் திர் 42 ரன்களுடனும் (15 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ்குமார் ரெட்டி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். எக்ஸ்டிரா வகையில் 16 வைடு உள்பட 17 ரன் கிடைத்தது. சாம்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

தோல்வி தொடர்பாக நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறுகையில்,

சற்று ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் பரவாயில்லை. தொடக்கத்தில் எங்கள் வீரர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஆடுகளத்தில் பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் கொஞ்சம் இருந்தது. ஆனால், எங்கள் வீரர்கள் அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு விளையாடினார்கள்.

எதிரணி எங்களுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்தது. அவர்கள் அப்படித்தான் அதிரடியாக விளையாடுவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் அவர்கள் மீண்டும் மிகச் சிறப்பாக ரன்களைக் குவித்தார்கள்.எங்களுடைய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக அமையவில்லை. சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். பந்து ஆடுகளத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியும். அதைப் பயன்படுத்தி எதிரணியின் ரன் வேகத்தைக் குறைத்திருக்கலாம்.

ஆட்டத்தின் நடுப்பகுதியில் அவர்களைக் கட்டுப்படுத்தி, ரன்களைக் குறைவாகக் கொடுத்ததில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம். இறுதியில் போட்டி மிகவும் நெருக்கமாக அமைந்தது.இரு அணிகளுமே தங்களுடைய ஆட்டத்தில் சில விஷயங்களை மேம்படுத்த வேண்டியிருக்கலாம். இந்தப் போட்டி இரு அணிகளில் எவர் பக்கமும் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறேன்.ஆட்டத்தின் தொடக்கத்தில் நாங்கள் கூடுதலாக ரன்களை வழங்கியதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல், பீல்டிங்கில் நாங்கள் ஓரளவுக்கு நன்றாகச் செயல்பட்டோம். இங்கு கேட்ச்களைப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல.

இருப்பினும், இன்னும் சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். இறுதி ஓவர்களிலும் சில நேரங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.

ஆனால், பவர்பிளே ஓவர்கள் எப்போதுமே எங்களுக்குச் சவாலாகத்தான் இருக்கும். எதிரணியின் ரன் வேகத்தைக் குறைப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.

எதிரணி பவர்பிளேவில் 100 ரன்கள் எடுப்பதைத் தடுத்து, அதை 80 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால்கூட அது எங்களுக்கு நல்ல முன்னேற்றமாக இருக்கும். அடுத்த போட்டியில் இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவோம். என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com