நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை - கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி


நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை - கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டி
x

Image Courtesy: @BCCIWomen

தினத்தந்தி 21 July 2025 8:45 AM IST (Updated: 21 July 2025 8:46 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

லண்டன்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முதல்முறையாக வென்ற இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் சவுத்தம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், 2வது போட்டியில் தோல்வி கண்ட பின்னர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் இன்று சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. அது எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் எங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த எந்தவொரு வாய்ப்பும் அளிக்கவில்லை. எல்லா பாராட்டும் இங்கிலாந்து அணியினரையே சாரும். மேகமூட்டமான சூழ்நிலையால் பேட்டிங் செய்வது எளிதானதாக இருக்கவில்லை. இருப்பினும் நாங்கள் போராடி கவுரவமான ஸ்கோரை எடுத்தோம்.

எங்களால் தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்தி அவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை. இதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இன்று ஒரு வித்தியாமான நாளாக அமைந்தது. இதனை தவிர மற்றபடி நாங்கள் நன்றாக விளையாடினோம். நாங்கள் அதனை அடுத்த போட்டிக்கு செல்லுகையில் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story