

ஜெய்ப்பூர்,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறி இருப்பதாவது;
”நாங்கள் அடித்த 225 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோர். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் ஒரு சராசரி ஸ்கோர் என்று நான் நினைத்தேன். ஆனால் நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை. மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டும். ஒரே ஓவரில் நிறைய பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அது பலமுறை நடந்தது.
எனது தொடைப்பகுதியில் சிறிய உள்ளது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு வாரம் ஓய்வு உள்ளது. எனவே நான் அதைச் சரிசெய்துவிடுவேன். எனது பேட்டிங் குறித்து வரும் விமர்சகர்களுக்கோ அல்லது அதைப் பற்றிப் பேசும் நபர்களுக்கோ நான் பதிலளிக்கத் தேவையில்லை. போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளைப் பெறுவதே என் வேலை.”
இவ்வாறு அவர் கூறினார்.