"வேஸ்ட் பவுலர்... ஓவர் ஹைப்!" - தங்கம் வென்ற இந்திய வீரரை கடுமையாக விளாசிய ஸ்ரீகாந்த்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது.
ரவி பிஷ்னோய்
Published on: 

நகோயா,

‘உடல் மட்டும்தான் திரும்பும்; பந்து திரும்பாது!’ என்று ரவி பிஷ்னோயை இந்திய முன்னாள வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தங்கப் பதக்கம்

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தங்கத்தை கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 212 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியும் கடுமையாக போராடியது. இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது.

விமர்சனம்

இந்திய அணி வெற்றி பெற்றபோதிலும், அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னோயின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அவர் 3 ஓவர்கள் மட்டுமே வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 44 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில், அவரது பந்துவீச்சு குறித்து முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘பந்து ஒருபோதும் திரும்பாது!’

ரவி பிஷ்னோயின் பந்துவீச்சு குறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது:

“திருப்பும் பிட்சிலும் பந்தை திருப்ப முடியாதவர் என்ன மாதிரியான ஸ்பின்னர்? ரவி பிஷ்னோயைப் பொறுத்தவரை அவரது உடல் மட்டுமே திரும்புதே தவிர, பந்து ஒருபோதும் திரும்பவில்லை.

ஒரு லெக் ஸ்பின்னராக இருந்துகொண்டு, ஸ்பின்னர்களுக்கு சாதகமான ‘ரேங்க் டர்னர்’ பிட்சிலும் பந்தை திருப்பத் தெரியாத ஒரே பவுலர் இவர்தான். அவர் பந்தை ஒரு அங்குலம் கூட திருப்பவில்லை. இது எப்படி சாத்தியம்? பிஷ்னோய்க்கு இதெல்லாம் ஒரு தனி கலை. மக்கள் அவரைத் தொடர்ந்து ஓவர் ஹைப் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு இன்னிங்ஸில் அவர் நன்றாகப் பந்துவீசி விடுவார்.

எந்தவொரு கிரிக்கெட்டரையும் நீங்கள் தொடர்ந்து ஹைப் பண்ணிக்கொண்டே இருந்தால், ஏதோ ஒரு இன்னிங்ஸில் அவர் நிச்சயம் நன்றாகச் செயல்பட்டுவிடுவார். அதற்குப் பிறகு, ‘அவர் பார்முக்கு திரும்பிவிட்டார்’ என்று கொண்டாடுவார்கள். ஆனால், அடுத்த 10 இன்னிங்ஸ்களில் அவர் மீண்டும் சொதப்புவார்.

ஒரு லெக் ஸ்பின்னர் என்றால் முதலில் பந்தை திருப்ப வேண்டும். பாகிஸ்தானின் சாதாரண ஸ்பின்னர்கள் கூட பந்தை திருப்புகிறார்கள். ஏன், அபிஷேக் சர்மா கூட பந்தை திருப்பிக் கொண்டிருந்தாரே!”

என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com