அணியாக நாங்கள் விரும்பியது எங்களுக்கு கிடைத்தது - கேப்டன் ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இ தனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தொடங்க இருந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி நாளான இன்று பயிற்சி ஆட்டம் 46 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.

அதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பிரதமர் லெவன் அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் சாம் கான்ஸ்டாஸ் சதமடித்து அசத்தினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, இது சிறப்பாக இருந்தது. அணியாக நாங்கள் விரும்பியது எங்களுக்கு கிடைத்தது. உண்மையான போட்டி நடைபெறாததில் கொஞ்சம் ஏமாற்றம். ஆனால் கிடைத்த நேரத்தை நாங்கள் முடிந்தளவுக்கு அதிகமாக பயன்படுத்தினோம்.

அதில் எங்களுக்கு முன்பாக இருந்ததில் தேவையான விஷயங்கள் கிடைத்தன. ஆஸ்திரேலியாவில் எங்களுக்கு ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. நாங்கள் இங்கே விளையாடிய போது அவர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்காத நேரங்கள் இருந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com