எங்களது பந்து வீச்சை மேலும் பலப்படுத்த வேண்டும்: ரிஷப் பண்ட்

இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

எங்களது பந்து வீச்சை மேலும் பலப்படுத்த வேண்டும்: ரிஷப் பண்ட்
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில்,

'வேகப்பந்து வீச்சாளர்களுடன் நடைபெற்ற பயிற்சி முகாம் சிறப்பாக அமைந்தது. பயிற்சி குழுவில் பரத் அருண் (இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர்) இணைந்துள்ளார். அவரது அனுபவம் பவுலர்களுக்கு நிச்சயம் உதவிகர மாக இருக்கும். பந்து வீச்சாளர்களிடம் இருந்து நான் என்ன எதிர்பார்க்கி றேன், அவரால் அணிக்கு என்ன கொண்டு வர முடியும் என்பது குறித் தும் பல முறை விவாதித்துள்ளோம். கடந்த சீசனை திரும்பி பார்க்கும் போது, எங்களது பந்து வீச்சை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். பந்து வீச்சு துறையில் நிறைய பகுதியில் அவர் கணிச மான பங்களிப்பை வழங்கக்கூடிய ஒருவராக இருப்பார். அவர் எங்கள் அணியில் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com