

அபுதாபி,
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற டோனி, நடப்பு தொடரோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற இருப்பதாக பரவலாக ஊகங்கள் எழுந்தன. ஒவ்வொரு போட்டி முடியும் போது, இளம் வீரர்களுக்கு தனது ஜெர்சியை கையெழுத்திட்டு அளித்தார். இதை வைத்து சமூக வலைத்தளங்களில் டோனி ஓய்வு பெற இருக்கிறாரா? என ஊகங்களை எழுப்பினர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் போடும் நிகழ்வின் போது டோனியிடம் இது பற்றி வர்ணணையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த டோனி, ஐபிஎல் கிரிக்கெட்டில் எனக்கு இது நிச்சயமாக கடைசி போட்டி இல்லை எனக்கூறி ஓய்வு பெற மாட்டேன் என்பதை சூசகமாக கூறினார்.