

மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ரிக்கல்டனின் சதத்தோடு மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 244 ரன் இலக்கை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற் றது. 8-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது 6-வது தோல்வியாகும். எஞ் சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி 'பிளே-ஆப் சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
இது தொடர்பாக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது,
கேட்ச் வாய்ப்புகளை நழுவ விடுவது இந்த சீசனில் எங்களுக்கு தொடர்க தையாகி விட்டது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே அதிர்ஷ்டமும், ஆட்டத்தின் போக்கும் மாறும். நீங்கள் கேட்ச் செய்ய தவற விடும்போது, அது உங்களை காயப்படுத்தும். ஆனாலும் பரவா யில்லை. வீரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த வரை போராடினார் கள். ஆனால் அதற்குரிய பலன் தான் கிடைக்கவில்லை.
பந்து வீச்சில் உள்ள பிரச்சினைகளை எப்படி தீர்க்க போகிறீர்கள் என கேட்கிறீர்கள். இந்த சீசனில் பவுலிங்கை பொறுத்தவரை அதிகமான வாய்ப்புகள் இல்லை. இருக்கிற பந்து வீச்சாளர்களில் என்னென்ன மாற் றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் என்பதை உண்மையிலேயே பார்க்க வேண்டும். நான் பந்து வீச்சாளர்களை குறைசொல்ல மாட்டேன். ஒட்டுமொத்த அணியாக மும்பை இந்தியன்சின் எதிர்பார்ப்பை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. எங்களிடம் பேரார்வம் கொண்ட உரிமையா ளர்களும், பயிற்சி குழுவினரும் உள்ளனர். ஏதாவது வழிமுறையை கண் டறிந்து வலுவாக திரும்புவோம். என தெரிவித்துள்ளார்.