

மும்பை,
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது;
”நாங்கள் ஆட்டத்தை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டோம். ஆனால் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய பல பகுதிகள் உள்ளன. உண்மையில் இந்த சீசனில் பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளேன். அப்படித்தான் நான் வழிநடத்த விரும்புகிறேன். அப்படித்தான் நான் அசாம் அணியையும் வழிநடத்துகிறேன்.
நீங்கள் உங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஹர்திக்கை ஆட்டமிழக்கச் செய்யக்கூடிய ஒரே வீரர் ஆர்ச்சர் மட்டும்தான். அது நல்ல பலனைத் தந்தது. நாங்கள் இன்னும் முன்னதாகவே தகுதி பெற்றிருக்க வேண்டும். சற்று தாமதமாகிவிட்டது. நிறைய வாய்ப்புகளை வீணடித்துவிட்டோம். தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எங்கள் தவறுகள் அனைத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.