

கொழும்பு,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹா கூறியதாவது,
'உஸ்மான் தாரிக் எங்களது 15 வீரர்களில் ஒருவர். நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். நீங்கள் தான் அவரை பெரியஆளாக்கி விட்டீர்கள். அவர் கடந்த சில மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரை எங்க ளது துருப்பு சீட்டு என்று நீங்கள் சொல்லலாம். தாரிக் ஓடி வந்து நின்று வித்த யாசமாக பந்து வீசுவது சந்தேகம் அளிப்பதாக கேள்வி எழுப்புகிறார்கள். அவரது பந்து வீச்சு இரண்டு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் சரியாக இருப்ப தாக கூறி அனுமதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு உட்பட்டே அவரது பந்து வீச்சு இருக்கிறது. இருப்பினும் அவரை பற்றி மக்கள் ஏன்? இவ்வளவு அதிகம் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை..உலகக் கோப்பையை பொறுத்தமட்டில் இந்தியாவுக்கு எதிராக எங்களது சாதனை சிறப்பானது கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு புதிய போட்டியில் விளையாட வரும்போதெல்லாம் அது ஒரு புதிய நாள். ஒரு புதிய போட்டியா கும். வெற்றி பெற சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். நடந்தது நடந் தது தான். வரலாற்றை மாற்ற முடியாது. அதில் இருந்து கற்றுக்கொள்ளலாம். அதில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம். நாங்கள் (இன்று) சிறப்பான திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சிப்போம். என்றார்.