முதல்முறையாக கோப்பையை வெல்வோம்: பஞ்சாப் வீரர் நம்பிக்கை

தொடக்க ஆட்டத் தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரை சர்சை எதிர்கொள்கிறது.
முதல்முறையாக கோப்பையை வெல்வோம்: பஞ்சாப் வீரர் நம்பிக்கை
Published on

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை யும், எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக் கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். குறைந்தது 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 'பிளே-ஆப்' சுற்றை சிக்கலின்றி எட்ட முடியும்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத் தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத் தில் நடப்பு சாம்பியனான ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரை சர்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன் வித்தியா சத்தில் பெங்களூருவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. ஆனால் இந்த முறை முதல்முறையாக கோப்பையை வெல்வது உறுதி என பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஷசாங் சிங் கூறியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், 'மே 31-ந்தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நாங்கள் விளையாடி கோப்பையை வென்றெடுப் போம். இது வெறும் உணர்வு மட்டுமல்ல. நிச்சயம் இது நடக்கும் என்பது எனக்கு தெரியும். இது எங்களின் தன்னம்பிக்கை. அணியின் நம்பிக்கை. அனை வரும் ஒரே மனநிலையில் உள்ளோம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com