எதிரணி எங்களை சீண்ட முயற்சித்தால் நாங்கள் பின்வாங்கமாட்டோம் - பென் ஸ்டோக்ஸ்

image courtesy:ICC
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிரூபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, களத்தில் எதிரணி வீரர்களை வார்த்தை ஜாலத்தால் வம்புக்கு இழுப்பது அவசியமான ஒன்று என்று நினைக்கவில்லை. இரு அணிகளுக்குமே அதை செய்யும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் இது மிகப்பெரிய டெஸ்ட் தொடர்.
இரு அணி வீரர்களுக்குமே களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நிறைய நெருக்கடி இருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி, நாங்கள் வேண்டுமென்றே எந்த சண்டையையும் தொடங்க மாட்டோம். போட்டி மீதே எங்களது கவனம் இருக்கும். அதற்காக எதிரணி எங்களை சீண்ட முயற்சித்தால் நாங்கள் பின்வாங்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.






