வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டம்: இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டம்: இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு
Published on

கொல்கத்தா,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷாய் ஹோப்பும், சேஸும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சேஸ் 40 ரன்களும், ஹோப் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடி காட்ட தொடங்கினர். ஹெட்மயர் 27 ரன்களும், ருதர்போர்டு 14 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் ஹோல்டர், ரோவ்மேன் பவல் அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com