

மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன.
அதன்படி, இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க ஆட்டக்காரரான பிரண்டன் கிங் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் 14 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 85 ரன்கள் எடுத்தார். ரோவ்மேன் பவல் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் சைபர்ட் அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே தரப்பில் நகர்வா, முசர்பானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்ய உள்ளது.