ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
x

image courtesy:PTI

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி 20-ம் தேதி நடைபெற உள்ளது.

ஜமைக்கா,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஓயிட்வாஷ் ஆக்கியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணியில் ஜூவல் ஆண்ட்ரூ மற்றும் ஜெடியா பிளேட்ஸ் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். அத்துடன் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள ஆல் ரவுண்டர் ரசல் அந்த 2 போட்டிகளில் மட்டும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:

ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஷிம்ரான் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹோசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மேன் பவல், ஆண்ட்ரே ரசல் (முதல் 2 போட்டிகளுக்கு மட்டும்), ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு.


1 More update

Next Story