

டெல்லி,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரை விளையாடி வருகிறது.
டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
இதனிடையே, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், 3-வது ஒருநாள் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக மைதானத்தில் அதிக அளவில் ஈரப்பதம் உள்ளது.
இதனால், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 3-வது ஒருநாள் போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.