வருண பகவானே... மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் -கேதர் ஜாதவ் உருக்கம்

வருண பகவானே... தண்ணீர் பஞ்சம் நிலவும் மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் என கேதர் ஜாதவ் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
வருண பகவானே... மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல் -கேதர் ஜாதவ் உருக்கம்
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருந்தன. நாட்டிங்காமில் நடைபெற இருந்த இந்தப் போட்டி டாஸ் கூட போட முடியாமல் மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மைதானத்தில் நின்றிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கடவுளுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வருண பகவானே... தண்ணீர் பஞ்சம் நிலவும் மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல். அங்கு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவை. நாடிங்ஹாமில் கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக வறட்சியாக இருக்கும் மகாராஷ்டிராவில் கொட்டித்தீர்" எனக் கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் இந்த முறை வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. தற்போது அங்கு  கடுமையான தண்ணீர்  தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கேதர் ஜாதவ்வின் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் புனே ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com