நான் என்ன செய்ய முடியும்...அது வீரர்கள் கையில் உள்ளது: சென்னை அணி பயிற்சியாளர் ஆதங்கம்

சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
நான் என்ன செய்ய முடியும்...அது வீரர்கள் கையில் உள்ளது: சென்னை அணி பயிற்சியாளர்  ஆதங்கம்
Published on

சென்னை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

கடந்த சீசனிலும் சென்னை அணி சிறப்பாக செயல்படவில்லை.இதனால் சென்னை அணியின் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என சென்னை அணி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய, சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது,

சென்னை அணிக்கு மட்டுமல்ல, இன்னும் 2 அணிக்கு பயிற்சியாளரா இருக்கேன். கிரிக்கெட் எந்த திசையில போகுதுனு தெரியாமலும், எந்த ஐடியாவும் இல்லாமலும் நான் நேரா ஐபிஎல்-க்கு வரல. இப்ப இருக்குற அணியில் நிறைய புதிய பிளேயர்கள் வந்திருக்கிறதால, டீம் செட்டிலாக நேரம் எடுக்கும். நம்பிக்கை வந்துட்டா வெற்றியும் வந்துடும். அதே மாதிரி மேட்ச்ச ஜெயிக்குறது வீரர்கள் கையில தான் இருக்கு. வெளியில் இருந்து மட்டும்தான் உதவி பண்ண முடியும். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com