சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான வெற்றி குறித்து ரிஷப் பண்ட் கூறியது என்ன.?

ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட விரும்புவதாக ரிஷப் பண்ட் கூறினார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான வெற்றி குறித்து ரிஷப் பண்ட் கூறியது என்ன.?
Published on

ஐதராபாத்,

ஐபிஎல் தொடரில் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியது பின்வருமாறு;

”எங்களது பந்துவீச்சாளர்களை பாராட்ட வேண்டும். ஷமி, ஆவேஷ், ரதி, எல்லோரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். நாங்கள் ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம். தனிப்பட்ட முறையில், நான் எனது 200 சதவீத உழைப்பைக் கொடுக்கிறேன். நான் எவ்வளவு கடினமாக உழைக்கிறேன் என்பது என் சக வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் தெரியும் என்று நினைக்கிறேன், அதுதான் எனக்கு முக்கியம்."

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com