உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்..? விவரம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது.
image courtesy: twitter/@BCCI
image courtesy: twitter/@BCCI
Published on

சென்னை,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி சில புள்ளிகளை இழந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பினஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி (62.50 சதவீத புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியது. இலங்கை (55.56) 3-வது இடத்தில் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55) அணி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா (54.17) 5-வது இடத்துக்கு இறங்கியது. முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேசில் உள்ளன.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற சிக்கல் எழுந்துள்ளது.

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்..?

இருப்பினும் இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வியை தழுவினால் நிச்சயம் வெளியேற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com