

சென்னை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் சென்னை அணி 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்காக தயாராகி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகியிருந்தார். பின்னங்காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு பிரச்சினையால் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட முடியாது என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வத்துடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், தோனி மீண்டும் எப்போது களம் காண்பார் என்பது தொடர்பாக சென்னை அணி சிஇஓ காசிவிஸ்வநாதன் கூறியதாவது,
தோனி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவர் முழு உடல்தகு தியை எட்டுவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். அவர் எப்போது களம் திரும்புவார் என்பதை சொல்ல முடியாது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் டிவால்ட் பிரேவிஸ் ஆடுவார் என்று நம்புகிறோம்' என்றார்.