நான் நெருக்கடியை உணரும் போதெல்லாம் அவரிடம் பேட் கேட்பேன் - அபிஷேக் சர்மா

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார்.
நான் நெருக்கடியை உணரும் போதெல்லாம் அவரிடம் பேட் கேட்பேன் - அபிஷேக் சர்மா
Published on

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிப்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காராக இறங்கிய அபிஷேக் ஷர்மா 46 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்தார். முதல் ஆட்டத்தில் டக்-அவுட் ஆன அபிஷேக் ஷர்மா, 2-வது போட்டியில் சதமடித்து அசத்தினார்.

இந்த போட்டி முடிந்த பின் அபிஷேக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இந்த ஆட்டத்தில் கேப்டன் சுப்மன் கில்லின் பேட்டை பயன்படுத்தி விளையாடினேன். 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இருந்து கில்லுடன் இணைந்து விளையாடி வருகிறேன். எப்போதெல்லாம் அவரது பேட்டை வைத்து ஆடுகிறேனோ அப்போதெல்லாம் சிறப்பாக ஆடியுள்ளேன். அதுவே இப்போதும் நடந்துள்ளது.

ஆனால் கில் பேட்டை எனக்கு சுலபமாக தந்து விடவில்லை. நான் நெருக்கடியை உணரும் போதெல்லாம் அவரிடம் பேட் கேட்பேன். உங்களது பேட்டை வைத்து விளையாடினால்தான் என்னால் மீண்டு வர முடியும் என்று கெஞ்சி கூத்தாடி பேட்டை பெற்றேன். அவருக்கு சிறப்பு நன்றி" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com